வடமாநில தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் வடமாநில தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில் உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. பீகாரை சேர்ந்த மற்றொரு வடமாநில தொழிலாளியான சிவாஜி குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததால் வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறி பீகாரில் இருந்து அழைத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றதாக சிவகுமார் என்பவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் போலீசார் கைது செய்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு கொலையை பற்றி கேட்டறிந்தார்.





