பாபநாசம் திரைப்பட பாணியில் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம்..!
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாபநாசம் திரைப்பட பாணியில் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிந்து குமார் என்பவர் கடந்த 26ஆம் தேதி முதல் மாயமானதாக அவரது குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து குமாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனம் ஒன்று கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குமாரின் செல் போன் எண்னை செய்து ஆய்வு செய்தபோது முத்துக்குமார் என்பவர் உடன் அவர் கடைசியாக பேசியது தெரியவந்தது.
முத்துக்குமார் செல்போனை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரை தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவளது வீட்டின் உட்புறத்தில் குழி தோண்டி இருப்பது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் பிந்து குமாரின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் முத்துக்குமரனை கைது செய்து கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.





