--- --:--:-- --

பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவர்கள்..!

7

காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே வரச் சொன்னதால் ஆத்திரமடைந்த மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரத்திலிருந்து கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் ஓட்டிச் சென்றபோது படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே ஏறி வர கூறியுள்ளார்.

 

இதையடுத்து அவரை மாணவர்கள் தாக்கியுள்ளனர். பொதுமக்கள் அவரை பிடிக்க முயற்சித்த போது அவர்களையும் தாக்கியுள்ளனர். பொதுமக்கள் துரத்தி சென்று ஒரு மாணவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon