வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள உடும்பு..!
தாய்லாந்தில் வீட்டுக்குள் இருந்த 4 அடி நீள உடும்பை அந்த பகுதி இளைஞர்கள் விரட்டி விரட்டி பிடித்தனர். கம்பேயன் பெட் மாகாணத்தில் வீடு ஒன்றின் கதவு இடுக்கில் உடும்பு ஒன்று சிக்கி கொண்டதை அந்த பகுதி இளைஞர்கள் பார்த்துள்ளனர்.
பின்னர் அதனை பிடிக்க எண்ணி அவர்கள் அதன் வாலை பிடித்து இழுத்து சென்றனர். அவர்களின் முயற்சிக்கு எதிர்வினையாக உடும்பு அவர்களிடமிருந்து தப்பி சென்றது. ஆனாலும் அந்த இளைஞர்களும் விடாப்பிடியாக உடும்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.






