இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவை..!
வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது, இந்த நிலையில் 24 மணி நேரமும் பேருந்து சேவையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பத்தாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஊரடங்கின் காரணமாக மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் 24 மணி நேர பேருந்து சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




