--- --:--:-- --

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு..!

1

துரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மருத்துவர் சண்முகப்பிரியா அனுப்பானடி துவாரா நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

 

8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கொரோனா உறுதி செய்யப்பட்ட பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

ஆனால் நுரையீரலில் 90 சதவீதம் அளவுக்கு தொற்று ஏற்பட்டதால் சண்முகப்பிரியாவிற்கு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார் . கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில் தாயும் அவரின் வயிற்றில் இருந்த சிசுவும் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே முன்கள பணியாளராக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணியாற்றிய மருத்துவர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon