இனிப்பு, கார வகைகள் தயாரிக்க கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்..!
சென்னையில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்க கட்டாயம் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென ஆட்சியர் மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை முன்னிட்டு பலகாரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்காலிகமாக திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் பலகாரம் தயாரிப்பவர்களுக்கும் பதிவு சான்றிதழ் கட்டாயம் எனவும், பொட்டலங்களில் பலகாரம் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம் , சைவ அல்லது அசைவ குறியீடு தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித் தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகளை 100 ppm வரை உபயோகிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளுக்கு 5 நாட்கள்தான் காலாவதி காலம் என்பதால் பிற இனிப்புகளுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது என த் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கொதிநிலையில் இருக்கும்போது, அதனுடன் புதிய எண்ணெய்யைக் கலக்கக் கூடாது என்றும், உணவு தயாரிப்பு மற்றும் கையாளும் பணிகளில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கி அணிந்திருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




