இந்த மாவட்டத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகுது கனமழை..!
நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (நவ.2) இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 2 நாட்களில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை உட்பட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
நாளை வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், தீபாவளி அன்று தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். எல் நினோ காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை கூறினார்.
இந்த மாவட்டத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகுது கனமழை..!
📱 Share on WhatsApp 𝕏 Share on X




