--- --:--:-- --

30 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!

7

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும், போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்துத் தண்டனை பெற்றுத் தருவதற்காக முதலமைச்சர் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

 

 

அப்போது, பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில், 12 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களும் என மொத்தம் 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் 46 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இதன்மூலம் மாநிலத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை 52 ஆக உயர உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் இம்மாதிரியான கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க ஏதுவாக மிக அதிகபட்ச தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்றுத் தருவது உறுதி செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ இலக்கை அடையும் வகையில் போதைப் பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கக் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon