--- --:--:-- --
02

லங்கை அணிக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ரா, சாய் சுதர்சன் அணிக்கு திரும்பினாலும் அவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும் கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இலங்கையின் தட்பவெப்ப நிலைக்குப் பழகுவதற்காக இந்திய வீரர்கள் கொழும்பில் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள். அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, இந்த அணியை இறுதி செய்துள்ளது.

 

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இளம் திறமையான மட்டையாளர் சாய் சுதர்ஷன் ஆகியோர் இந்த 15 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரின் இறுதி கூட்டணியும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) வழங்கும் உடற்தகுதி அனுமதியைப் பொறுத்தே அமையும்.

 

பேட்டிங்கை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் போன்ற இளம் வீரர்கள் தங்களது இடங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சுப் பிரிவில், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் வேகப்பந்து தாக்குதலை வழிநடத்துவார்கள். சுழற்பந்துப் பிரிவில், குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதார் ஆகியோர் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து பொறுப்பைப் பகிர்ந்துகொள்வார்கள்.

வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட தொடைத்தசை காயத்தைத் தொடர்ந்து சரன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேச அணிக்காகவும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சரன்ஷ், தனது 33-வது வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

 

இந்திய அணி : சுப்மன் கில்(கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யாஷ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சாய் சுதர்சன், துருவ் ஜோரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பரார், தேவ்தத் படிக்கல் , சரன்ஷ் ஜெயின்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon