--- --:--:-- --

உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு… க. செல்வராஜ் தீவிர பரப்புரை!

செல்வராஜ்

மக்கள் மத்தியில் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார் செல்வராஜ்.

பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் க. செல்வராஜ், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூர் மத்திய மாவட்டம், ஆண்டிபாளையம் 38-வது வார்டு மற்றும் 40, 41 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் க. செல்வராஜ் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அவருக்குப் பூரண கும்ப மரியாதையுடனும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆரத்தி எடுத்து தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

selvaraj
வாக்கு சேகரிப்பின்போது தினேஷ்குமாருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய க. செல்வராஜ், தான் எப்போதும் மக்களில் ஒருவனாய் இருந்து இப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யப் போவதாக உறுதி அளித்தார். தொகுதி மேம்பாடு, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

திருப்பூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணம், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon