--- --:--:-- --

தி.மு.க அரசை கண்டித்து தேவேந்திர இலக்கிய மன்றம் ஆர்ப்பாட்டம்

8

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திர இலக்கிய மன்ற அமைப்பின் சார்பில் தி.மு.க அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜமீன்தார் அறிவழகன், எஸ்.சி பட்டியலில் இட ஒதுக்கீட்டில் 15 % இருந்து 6% இட ஒதுக்கீட்டை எடுத்து எம்.பி.சி பட்டியில் சேர்த்து தேவேந்திர குலவேளாளர் சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் திமுக அரசிற்கு தபால் மூலமாகவும் பலமுறை கடிதம் எழுதியும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

 

மேலும் இது குறித்து தி.மு.க அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்பொழுது வரை எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். எந்த அரசியல் கட்சி எஸ்.சி பட்டியலை நீக்குகிறதோ அந்த அரசியல் கட்சிக்கு தான் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆதரவளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon