எதிரி நாடு தாக்கும்போது முடிவெடுக்க முடியாத வலிமையற்ற பிரதமர் – ஜோதிமணி எம்.பி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உரையில்லாமலே மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (5ஆம் தேதி) நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவார் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சியினர் தாக்க இருந்ததாக தனக்கு தகவல் கிடைத்ததால் அவரை அவைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்துள்ளார்.
இன்று அவையை ஒத்திவைப்பதற்கு முன் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி எப்படிச் சென்றார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என கூறினேன்” எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




