--- --:--:-- --

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களை விட நான் வேகமாக செயல்படுகிறேன் – பிரதமர் மோடி

1

காங்கிரஸ் ஆண்ட காலத்து பிரதமர்களைவிட நான் மிக வேகமாக செயல்படுகிறேன். எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, HAL ஆகிய மூன்று பொதுத்துறை லாபகரமாக செயல்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார்.

 

அப்போது அவர் கூறியதாவது; “நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியை இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதை குடியரசுத் தலைவர் சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சியில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம். உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது, இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அறிவியல் துறை, விளையாட்டு துறை என அத்தனை துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறி வருகிறது.
ஒப்பந்தங்களின் தாய் என்று வர்ணிக்கப்படக்கூடிய ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த அரசு மீது எதிர்க்கட்சிகள் நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்கிறேன். விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன.

 

இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது. குஜராத்தில் நடந்த வைப்ரண்ட் இந்தியா நிகழ்ச்சியில் வளர்ந்த நாடான ஜப்பான் கூட இந்தியாவின் செயல்பாடுகளை புகழ்ந்தது.

 

ஜப்பான் தான் அந்த நிகழ்ச்சியின் இந்தியாவின் கூட்டாளியாக இருந்தது. அறிவியல் துறை, விளையாட்டு துறை என அத்தனை துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறி வருகிறது. ஆனால் இதே ஜப்பானை தான் நான் குஜராத் முதல்வராக இருந்தபோது போட்டியாக நினைத்தேன்.

 

இன்று, உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று வருகிறது. விரைவான வளர்ச்சியும் குறைந்த பணவீக்கமும் ஒருங்கே அமைந்திருக்கும் இந்த அரிய நிலை, நமது பொருளாதாரத்தின் வலிமைக்கும் மீள்தன்மைக்கும் ஒரு சான்றாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon