--- --:--:-- --

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

3

டைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

 

அந்த வகையில், புத்தாண்டு தினமான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1849.50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

 

இந்நிலையில், புத்தாண்டு தினமான இன்று முதல் நிதித்துறை தொடர்பான பல மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களின் Credit Score 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக, வாரத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். எனவே, தவணையை செலுத்தாதது, தாமதமாக செலுத்துவது போன்றவை உடனுக்குடன் சிபில் ஸ்கோரில் அப்டேட் செய்யப்படும்.

 

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் இன்று முதல் செல்லாததாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுக்க, UPI மற்றும் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு சரிபார்ப்பு விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon