ஜூலை 4 முதல் துணைத் தேர்வுகள்: அமைச்சர் அறிவிப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், 53,978 மாணவ, மாணவியர் பாஸ் ஆகவில்லை. அதேநேரத்தில், 15,652 பேர் பொதுத்தேர்வை எழுதாத மாணவர்கள்.
இந்நிலையில், 10, 11-ம் வகுப்புகளுக்கு ஜூலை 4-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். துணைத் தேர்வுக்கான அட்டவணை நாளை (மே 17) வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




