உலக அழகிகள் முன் நம் நாட்டு பெண்களுக்கு அவமரியாதை?
உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள ஹைதராபாத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு பெண்களுக்கு கோயில் ஒன்றில் இந்திய பெண்கள், பாதாபிஷேகம் செய்து வரவேற்றனர்.
இதனை பாஜக மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிகள், வெளிநாட்டு பெண்கள் முன்னிலையில் நம் நாட்டு பெண்களுக்கு நடந்த அவமரியாதை என விமர்சித்துள்ளன. அதே நேரத்தில் சிலர் இது விருந்தோம்பலின் ஒரு பகுதி தானே என்றும் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




