--- --:--:-- --

செல்போனை உடைத்த ஆத்திரத்தில் கிணற்றில் குதித்த தங்கை..காப்பாற்ற சென்ற அண்ணன்..இருவரும் பலி..!

3

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சித்திரக்குமார். இவரது மனைவி ஜீவிதா. இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16 வயதில் பவித்ரா என்ற மகளும் இருந்தனர்.

 

மணிகண்டன் ஐடிஐ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பவித்ரா இரவு நேரங்களில் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும் அவரை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இருந்தாலும் சொல்பேச்சு கேளாத பவித்ரா சம்பவத்தன்று இரவு உறங்காமல் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சகோதரன் மணிகண்டன் தன் தங்கையிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தூங்கச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளான்.

 

ஆனால் பவித்ரா செல்போனை கேட்டு அடம் பிடித்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன் செல்போனை கீழே வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வெளியே ஓடி உள்ளார். ஓடிய வேகத்தில் வீட்டின் அருகே உள்ள விவசாயி கிணற்றில் குதித்ததாக சொல்லப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது தங்கையை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றில் குதித்துள்ளார்.

 

நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வரவில்லை. இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த நவல்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி பவித்ரா மற்றும் மணிகண்டன் உடல்களை மீட்டனர்.

 

பிள்ளைகளின் உடல்களை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon