திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டு அமர்ந்து அசைவ சாப்பாடு.. சர்ச்சை..!
திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டில் அமர்ந்து இஸ்லாமியர்கள் அசைவ சாப்பாடு சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மலை மீது ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு சமூக நல்லிணக்கத்திற்காக சமபான்மை விருந்து நடத்த போவதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து அங்கு அசைவம் சாப்பிடக்கூடாது என போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு தொழுகைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தர்காவிற்கு செல்லக்கூடிய பாதையில் அமர்ந்து இஸ்லாமிய நிர்வாகிகள் மூன்று பேர் அசைவம் சாப்பிடும் வீடியோ பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





