தமிழக வெற்றி கழக நிர்வாகி மீது கொலை மிரட்டல் புகார்..!

மிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுனர்கள் தங்களுக்கான சம்பள பாக்கியை கேட்டால் அந்த கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

சென்னையில் வசித்து வரும் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர். அதில் தாங்கள் தமிழக வெற்றி கழகத்தின் அபிராமபுரம் துணைச்செயலாளர் மோகன் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த கட்சியின் மாநாட்டிற்கு தொண்டர்கள் சென்ற வேனை இயக்கியதாக கூறியுள்ளனர்.

 

இதன் பின்னர் பேசியபடி மோகன் சம்பளத்தொகையை தரவில்லை எனவும் பணத்தை கேட்டால் அவரும் அதே கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இருவரும் தங்களை ஆபாசமாக திட்டியதாகவும் கூறியுள்ள அவர்கள் இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.