நுரையீரலில் சிக்கிய எல்இடி லைட்..மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை..!
மதுரை மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் பகுதியில் சிக்கியிருந்த விளையாட்டு காரின் எல்இடி லைட்டை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம் கூட்டத்தப்பட்டியை சேர்ந்த குழந்தைக்கு இருமல் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எக்ஸ்ரேவில் குழந்தையின் நுரையீரல் மூச்சுக் குழாயில் ஒரு பொருள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் நுரையீரல் சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





