ராமநாதபுரம் அரசு மதுபான கடையில் காலாவதியான குளிர்பானம் குடிக்க இருவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் நண்பர்களுடன் சென்ற மதுப்பழக்கம் இல்லாத ஜான் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளார்.
குடித்த 10 நிமிடத்தில் அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் தேதியை பார்த்தபோது காலாவதியாகி 40 நாட்கள் ஆன கூல்ட்ரிங்க்ஸை கொடுத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்றும், போலீசார் விசாரிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்