--- --:--:-- --

குடும்பத்துடன் சென்ற துப்புரவு தொழிலாளி.. நடுரோட்டில் அடாவடி செய்த பைனான்ஸ் ஊழியர்கள்..!

10

தேனியில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்த துப்புரவு தொழிலாளியை பைனான்ஸ் ஊழியர்கள் வழிமறித்து சாவியை பிடுங்கி அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணி பிரகாஷ் துப்புரவு தொழிலாளியான இவர் தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கியதாக தெரிகிறது.

 

பாண்டியன் பண்ணை அருகே குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை பைனான்ஸ் ஊழியர்கள் வழிமறித்து சாவியை பிடுங்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியினர் கவனித்து பைனான்ஸ் ஊழியரிடம் தட்டி கேட்டனர். ஊழியர்களை அங்கிருந்தவர்கள் தாக்க முயன்றதால் மூவரும் ஓட்டம் பிடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon