--- --:--:-- --

ஓசியில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட அரசு கல்லூரிகளுக்கு வந்த போலி அதிகாரி..!

9.1

சீர்காழியில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கல்லூரிகள் புகுந்து ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி பேராசிரியர்கள் அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது என்றும் கல்லூரி முதல்வரின் அறைக்குள் வந்த நபர் தன்னை பறக்கும் படை அதிகாரி எனக் கூறி பேராசிரியர்களை அழைத்து சென்று ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்தார்.

 

அந்த நபருக்கு பேராசிரியர்கள் காபி, இனிப்பு வழங்கி உபசரித்த நிலையில் பிறகு அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது. தகவல் அறிந்த காவலர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டு இருந்தபோது காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon