--- --:--:-- --

மதுரையில் 7 புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா..!

6

டைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மதுரை மாவட்டம் மற்றும் 7 புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா மதுரை காலேஜ்ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  தீர்மானம் எடுக்கப்பட்டது.

.

01.06.2008 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8370 எனவும் 01.06.2000 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 15200 அடிப்படை ஊதியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

 

இதுவரை எந்த ஒரு ஊதியக்குழுவிலும் ஒரே பதவி “ஒரே கல்வித் தகுதி” “ஒரே பணி என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தும் இரு வேறு ஊதியங்கள் நிரணயித்ததில்ளல் இந்தியாவிலேயே தூய்மை பணியாளர்களின் அடிப்படை ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதை மாண்புமிகு தமிழக முதல்வர் கலந்து கொண்டு திமுக ஆட்சி அமைந்ததும் ஊதிட முரண்பாடுகள் களையப்படும் என்று வாக்குறுதிகள் கொடுத்தார் கொடுத்தபடி,திமுக அரசின் தேர்தல் அறிக்கை-311 ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ” வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்ஊதியமுரண்பாட்டைகளைய கோரி கடந்த காலத்தில் மிக கடுமையான பல்வேர காலவரையற்ற உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வந்தோம். கடந்த 2002 ஆண் டிசம்பர் 27 முதல் 6 நாட்கள் நடைபெற்ற காலவரையற்ற போராட்டத்தில் 01.01.2022 ல் மாண்புமிகு தமிழக முதல்வர் உண்ணாவிரத்தில் “சமவேலைக்கு ஊதியம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க மூன்று நடுவர்குழு அமைத்து அறிக்கை வெளியிட்டார்.

 

அதன்படி அரசானை நிலை என்25 30.01.23 வெளியிடப்பட்டது. போராடிய இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்களை 10.03.2003 அன்று அழைத்து மூன்று நபர் அடங்கிய மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் (செலவினம்) பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குன் ஆகியோர்கள் அடங்கிய உயர்மட்ட குழு 31.08.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிடை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டறிந்தது.

 

அதில் 110 பக்கங்கள் நிறைந்த ஆவணங்கள் மூன்று நபர்கள் குழுவிடம் SSTA அமைப்பால் அளிக்கப்பட்டு அதனை அரசுக்கு விரைந்து அளித்து 14 ஆண்டு காலமாக ஏற்பட்டுள்ள இந்த ஊதியமுரண்பாட்டை சரிசெய்ய வேண்டும்‌.அதன் மூலம் தமிழக கல்வி தரத்திற்க்கு வழிவகுக்கும் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ரெக்ஸ்ஆனந்தகுமார்,மாநில பொதுசெயலாளர் ராபர்ட்,மாநிலபொருளாளர் கண்ணன், மாநிலத்துணைத்தலைவர் ஞானசேகரன்,மாநிலதுணை செயலாளர்வேல்முருகன் மற்றும் மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon