--- --:--:-- --

திடீர் உடல்நலக்குறைவு : சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

7

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர், டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்றால் அண்மையில் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 31 மற்றும் இம்மாதம் 1ஆம் தேதி மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில் சோனியாகாந்தி பங்கேற்றிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon