பா.ஜ.க நிர்வாகி அஸ்வத்தாமன் மீது புகார்..!
பா.ஜ.க மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான அ. அஸ்வத்தாமன் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அஸ்வத்தாமன் தி.மு.க வேட்பாளர் சி. என். அண்ணாதுரையிடம் தோல்வியைத் தழுவினார். பா.ஜ.க நிர்வாகியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான அ. அஸ்வத்தாமன் ரூ.38 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை என்றும் பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பா.ஜ.க-வின் முன்னாள் திருவண்ணாமலை மாவட்டத் தலைவருமான பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று புகார் அளித்தார்.
இந்த புகாரில், பா.ஜக நிர்வாகி அஸ்வத்தாமன், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.38 லட்சம் பணம் பெற்று, தற்போது வரை திருப்பி தரவில்லை எனவும், பணத்தை திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ‘வீ த லீடர்ஸ்’ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாலசுப்பிரமணியன் முன்னதாக பா.ஜ.க-வின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக இருந்தவர். அண்ணாமலை பா.ஜ.க-வில் இருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தை தொடங்கியதும் அதில் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் பா.ஜ.க நிர்வாகி பாலசுப்பிரமணியன், பா.ஜ.க நிர்வாகி அஸ்வத்தாமன் மீது திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகார், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





