திருவொற்றியூர் கொலைக்கு என்ன பதில்?
சென்னை திருவொற்றியூரில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரிய இளைஞர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க அரசு மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார். “முதலமைச்சரிடம் வேணும்னா போய் சொல்லு என அதிகாரியே சவால் விடும் அளவுக்குத் தான் சட்டம்-ஒழுங்கு உள்ளதா? காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய்யைக் காவல்துறையினரே ‘டம்மி சி.எம்’ ஆக நினைக்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இக்கொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போடுவதாக பிரதீப் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்த படுகொலை நடந்துள்ளது.
இந்த படுகொலை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறையினரே விஜயை ‘டம்மி சி.எம்’ என நினைக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் பிரதீப்ராஜ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சென்னையில் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட பிரதீப்ராஜ் என்ற 26 வயது இளைஞர், தமக்கு பாதுகாப்பு கோரி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அங்கிருந்த காவல் அதிகாரி தமக்கு பாதுகாப்பு வழங்காமல் மிரட்டியதாக பிரதீப்ராஜ் இறப்பதற்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், “முதலமைச்சரிடம் வேணும்னா போய் சொல்லு, என்னை ஒன்றும் பண்ண முடியாது” என்று காவல் அதிகாரி தன்னை மிரட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே பிரதீப்ராஜ் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவத்தைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசை சாடியுள்ளார். காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரையே (விஜய்) காவல்துறையினர் ‘டம்மி சி.எம்’ ஆக நினைக்கிறார்களா? “போய் முதலமைச்சரிடம் சொல்” என்று ஒரு காவல் அதிகாரியே சவால் விடும் அளவுக்குத் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் அடுத்த நாளே படுகொலை செய்யப்படுவார்கள் என்ற ஒரு புதிய மோசமான வரலாற்றை இந்த அரசு படைக்கப் போகிறதா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘சி.எம்-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே ‘டம்மி சி.எம்’ (DUMMY CM) ஆக நினைக்கிறார்களா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்கஸ் (Circus0 ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, இ.டி என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று திசை திருப்புதல் (Divert) செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார். இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.” என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தலைநகர் சென்னையில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் மற்றும் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




