--- --:--:-- --

தங்கையின் போட்டோவை கிண்டல் செய்த இளைஞருக்கு கத்திகுத்து..!

6

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேருந்தில் தங்கையை செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்த நபரை தாக்கியதில் தடுக்க வந்த இளைஞரின் அண்ணன் கொலை செய்யப்பட்டார். ஜவுளி கடை ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் சக்கரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

 

அதே பேருந்தில் பயணித்த தாமஸ் எடிசன் என்ற இளைஞர் அந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

 

இது பற்றி தனது அண்ணன் குப்புசாமியிடம் அந்த பெண் செல்போனில் தகவல் தெரிவிக்க குப்புசாமி தனது நண்பர்களுடன் வந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய தாமஸ் எடிசனை மடக்கிப்பிடித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூட்டிச் சென்று எடிசனை தாக்கியதாகவும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தம்பி மீதான தாக்குதலை தடுத்த எடிசனின் சகோதரரும் தாக்கப்பட்டுள்ளார்.

 

இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்த நிலையில் கொலை வழக்கு பதிவு செய்ததால் குப்புசாமியை கைது செய்து அவரது நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon