ஏரியில் இறந்து கிடந்த பாம்புகள் மற்றும் மீன்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் மூத்தகிரி அடுத்த அபிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அபி நாயக்கன்பட்டி அழகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சென்ற ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக தண்ணீர் நிறைந்து காணப்பட்டது.
இந்த ஏரியில் இன்று தொடர்ந்து மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் ஊத்தங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் வந்த பிறகு மீன்கள் மற்றும் பாம்புகளின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





