கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் மோதிய கார்..!
சாலையில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது உரசியதோடு எதிரே வேகமாக வந்த டூவீலர் மீது அசுர வேகத்தில் மோதியது.
டூவீலரில் பயணம் செய்த இரண்டு பேர் சினிமா பட காட்சிகளை போல் தூக்கி வீசப்பட்ட நிலையில் மற்றொரு வாகன ஓட்டி நூலிழையில் ஜம்ப் செய்து உயிர் தப்பிக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அருகே உள்ள வளஞ்சேரி பகுதியில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





