--- --:--:-- --

சத்ரபதி சிவாஜியின் சிலை சேதம் – சேதப்படுத்தியது யார் என காவல்துறை விசாரணை

2

ன்னியாகுமரி மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலை சேதம் அடைந்திருப்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அது குறித்து விசாரிப்பதாக கன்னியாகுமரி எஸ்.பி.ஹரிகரன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலை எப்படி சேதமானது என்பது குறித்து விசாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon