--- --:--:-- --

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இரு மூதாட்டிகள் உயிரிழப்பு..!

1

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கோவையில் இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

கோவை வடகள்ளியை சேர்ந்த 56 வயது மூதாட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் அனுப்பூர் பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். திருப்பூரை சேர்ந்த மூதாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்ததாகவும் கோவையை சேர்ந்த மூதாட்டிக்கு இணை நோய் இருந்ததாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon