--- --:--:-- --

ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை – திமுக கூட்டணி

3

ளுநர் மாளிகை முன்பு வரும் 12ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற மாண்பை குறைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து தனக்கு கவலை இல்லை என ஆளுநர் நினைப்பாரே ஆனால் ஆளுநர் எங்களுக்கு தேவை இல்லை எனக்கூறியுள்ளனர். தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக இரட்டை ஆட்சி நடத்துகிறது என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon