நடு வானில் விமானியின் மேல் ஊறிய பாம்பு..!
தென் ஆப்பிரிக்காவில் தனது இருக்கையில் நாகப்பாம்பு இருந்ததை நடுவானில் கவனத்த விமானி விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். 58 வயது விமானி 4 பேர் பயணித்த தனியார் விமானத்தை இயக்கியுள்ளார்.
தனது இடுப்பு பகுதியில் ஏதோ ஊருவது போல் உணர்ந்த அவர் திரும்பி பார்த்த பொழுது கொடிய விஷத்தன்மை வாய்ந்த கோப்ரா என அழைக்கப்படும் மஞ்சள் நிற பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தன்னைத்தானே ஆசுவாசபடுத்திக் கொண்டு பயணிகள் அச்சமடையா வண்ணம் பக்குவமாக அதையடுத்து வைத்த அவர் பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்த விமான நிலையத்தில் விமானத்தை தர இறக்கியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





