--- --:--:-- --

கருப்புக் கொடி காட்டுவோம் பிரதமரின் வருகைக்கு காங்கிரஸ் கண்டனம்..!

2

பிரதமர் சென்னை வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி பதவியை இழக்க செய்து அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு கண்டனம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் பிரதமர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon