--- --:--:-- --

தாம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடு..!

4

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் சென்னை விமான நிலையம் புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர உள்ளார்.

 

இதனை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் மூன்று காவல் ஆணையாளர்கள், 13 காவல்துறை ஆணையர்கள், சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு உள்ளிட்ட நான்காயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுடன் ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பல்லாவரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி வரை தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon