--- --:--:-- --

பான் கார்டை ஆதார் உடன் இணைக்காதவர்களுக்கு இதுதான் கதி..!

5

ஜூன் மாதத்திற்குள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

 

நிர்மலா சீதாராமனிடம் ஆதார் இணைப்புக்கான அபராத தொகை குறித்து கேள்வி அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் ஏற்கனவே ஆதார், பான் கார்டு இணைப்புக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது எனவும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

 

எனவே அதிக கால அவகாசம் வழங்கப்பட்டதால் இனியும் தாமதம் தொடர்ந்தால் அபராத தொகை கூடிக்கொண்டே போகும் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon