திருநங்கையின் வாழ்கையை கெடுத்துவிட்டு ஓடிய இளைஞர்..!
காதல் என்ற பெயரில் திருநங்கையை ஏமாற்றி திருமணம் செய்து தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்திரா நகரில் வசித்து வரும் ரோஜா என்ற திருநங்கையை பாபு என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சிலமாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது பாபு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கை ரோஜா தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரோஜாவுக்கு ஆதரவாக திருநங்கைகள் தெலுங்கானா மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





