தமிழ்நாட்டில் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம்..!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும் கொரோனா வழி முறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தமிழ்நாடு பொது மருத்துவ சட்டம் 1939 இன் படிதண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





