சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை டிஜிபிக்கு ஆளுநர் ஆதிரடி உத்தரவு..!

தெலுங்கானாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 25ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கிளப்பில் நடந்த மது விருந்தில் 15 வயது சிறுமி தனது நண்பருடன் கலந்து கொண்டார்.

 

விருந்து முடிந்து வெளியே வந்த சிறுமியை மது விருந்தில் கலந்து கொண்டவர்கள் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினார். 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். வீடு திரும்பிய சிறுமி தனது தந்தையிடம் கூறிய நிலையில் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இதனை மானபங்கம் வழக்காக போலீசார் பதிவுசெய்தனர். பிறகு கூட்டு பலாத்காரம் வழக்காக மாற்றியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு 2 நாட்களாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெலுங்கானா தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.