பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத் தந்தை..!

ரக்கோணம் அருகே பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வாளியில் மூழ்கடித்து தந்தையை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் அடுத்த தொழிற்சங்கங்களை சேர்ந்த மனோ- நந்தினி தம்பதியினருக்கு பிறந்து 40 நாட்கள் ஆன ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

வீட்டில் இருந்த குழந்தை வீட்டில் இருந்து காணாமல் போனதால் பல இடங்களில் தேடிய பொழுது குளியலறையில் இருந்த வாளியில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவலர்கள், குழந்தையின் பெற்றோர் மற்றும் பாட்டியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்த நிலையில் மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் மது போதையில் இருந்த அவர் ஆத்திரத்தில் குழந்தையை கழிவறையில் இருந்த வாளித் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.