இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!

ந்தியாவில் மீண்டும் கொரொனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் அண்மையில் குறைந்திருந்த கொரொனா தொற்று மக்களை சற்று நிம்மதி அடையச் செய்தது. ஆனால் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கி நான்கு அலையின் அறிகுறியாக உருவெடுத்திருக்கிறது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஜூன் மாதம் நான்காம் தேதி தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரொனா தொற்று எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.

 

இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரொனா பரவல் தீவிரம் அடையாமல் இருக்க பரிசோதனைகளை அதிகரிக்கவும் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து கட்டுப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பகுப்பாய்வு செய்யவும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்பட்டதால் இந்தியாவில் மூன்றாவது அலை பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.