--- --:--:-- --

தேசியத் தேர்வு முகமை செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் திட்டம்!

8

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசியத் தேர்வு முகமையின் (NTA) செயல்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

 

தேர்வுகளை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள முகமை அமைப்பு உண்மையில் பயன்பாட்டில் உள்ளதா, அது சரியான முறையில் இயங்கி வருகிறதா அல்லது இல்லையா என்பதை நேரடியாகச் சென்று ஆராய உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் தற்காலிகத் தீர்வுகளுக்குப் பதிலாக நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon