ரம்பா வெளியிட்ட மகளின் புகைப்படம் வைரல்..!

டிகை ரம்பா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் தற்போது குடும்பம், குழந்தைகள் என பிசியாகி விட்டார்.

 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா தனது குடும்பத்தின் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு லான்யா, சாஷா என்ற மகள்களும், சிவின் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகள் லான்யா தற்போது 11 வயதை தொட்டிருக்கிறார்.

 

அவரது பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோவை ரம்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ரம்பாவின் மகளும் அச்சு அசல் அவரைப்போலவே இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.