--- --:--:-- --

தமிழகம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு அமல்..!

1

திகரித்து வரும் கொரொனா மற்றும் ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரம், ஆவடி காவல் ஆணையரங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 10,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

வெளியூர்களில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வருவோர் செல்ல ஏதுவாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து ஆட்டோக்கள் மற்றும் வாடகை டாக்சிகள் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. ஊரடங்கின் பொழுது குறைந்த அளவு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

சென்னை அண்ணா சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை மற்றும் ஓஎம்ஆர் சாலைகள், திருவொற்றியூர், நெடுஞ்சாலை, பூந்தமல்லி மற்றும் நெடுஞ்சாலைகள் இரவு முதலே வெறிச்சோடின.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon