--- --:--:-- --

பெண் போக்குவரத்து காவலரை தாக்க முயற்சி..!

13

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்து காவலரை தாக்க முயன்றவருக்கு எதிராக திமுக வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னையில் பெய்த கனமழையால் கடந்த ஏழு நாட்களாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

 

மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறை காவலர் மாற்று வழியை பயன்படுத்துமாறு அவர்களிடம் கூறினார்.

 

அப்போது இருவர் அந்த பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இதுகுறித்துபெண் காவலர் புகார் கொடுத்துள்ளார். புகாரை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக வழக்கறிஞர் ஒருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon