--- --:--:-- --

அழகு நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!

1

சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிளஸ்டூ மாணவிகள் சிலர் பள்ளி அருகில் இருக்கும் சக மாணவியின் தாயார் பணிபுரியும் அழகு நிலையத்திற்கு சிகை அலங்காரம் செய்வதற்கு சென்றிருக்கிறார்கள்.

 

அங்கு பணிபுரிந்து வந்த விக்னேஸ்வரன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் அழகு நிலையத்தில் பணிபுரிந்த விக்னேஸ்வரன் லக்ஷ்மி அவருடைய மகளான 17 வயது சிறுமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

 

மேலும் தப்பியோடிய ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்தும் முறையாகக் கண்காணிக்க தவறியதாக ஆசிரியை ஒருவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. மேலும் 2 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon