--- --:--:-- --

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும்..!

6

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சேலம், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

28 மற்றும் 29 தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon