விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற நடிகர் மாதவன்..!
படப்பிடிப்பு காரணமாக விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார் .இந்தியாவில் இருந்து துபாய் செல்வோர் ஆர்டிபிசிஆர் சான்று அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற நடிகர் மாதவன் விமானத்தில் தனியாக பயணித்துள்ளார்.
விமானத்தில் இருக்கைகள் அனைத்தும் காலியாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன் ஒருபுறம் தனியாளாக பயணிப்பது ஆச்சரியமாக இருந்தாலும் மற்றொருபுறம் சோகமாக இருப்பதாகவும் இந்த பேரிடர் காலம் விரைவில் முடிவுக்கு வர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.






